"Here am I" to "Who am I"
But
When
Here the sign God gave was a future sign. (He gave the staff-serpant and leprosy-child like hand sign. But Egyptian magicians could duplicate some of the signs
Human beings change often but the Lord who calls Himself "I am that I am" is the same yesterday, today and forever.Him choosing us itself is a sign and the mission He gives us and the fulfillment of the same are the great signs.
Living as salt and light in this society and showing His image in our lives are the mission in front of us today. Say 'Here am I' and go.
Please visit my website : http://blog.micyell.com/ and introduce your friends.
அனுப்பப்பட்டவன், பகுதி 2
"இதோ அடியேன்" சொன்னவர் "நான் ஒரு வேஸ்ட்"னு சொல்றார்.
மோசே, "பார்வோனிடத்திற்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரவும் நாம் எம்மாத்திரம்" என்றான். அதற்கு அவர், "நான் உன்னோடே இருப்பேன். நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்த பின் நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள். நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்" என்றார்.
பச்சை முள்செடி எரிந்த போதும், "மோசே மோசே"ன்னு கடவுள் பெயர் சொல்லிக் கூப்பிட்டப்போவும் "இதோ அடியேன்" அப்டின்னு அட்டென்ஷன்- ல நின்ன மோசே, மக்கள நீதான் எகிப்துல இருந்து கூட்டிட்டு வரணும்னு சொன்னது ஜகா வாங்கிட்டாரு, "நான் எம்மாத்திரம்" அப்படிங்கறார். இஸ்ரவேலன் ஒருத்தனக் காப்பாத்தறதுக்காக எகிப்தியன் ஒருத்தனக் கொன்ன அதே மோசே தான் நொந்து நூடுல்ஸ் ஆகி இப்படிச் சொல்றார். சின்ன சைஸ் புரட்சி செய்தவரு, மெகா சைஸ்ல கடவுளே அழைச்சு புரட்சி செய்யச் சொன்னப்போ, "வேணாம் சாமி"ங்கறார்.
இப்போ கடவுள் குடுத்த அடையாளம் எதிர்காலத்துல நடக்கக் கூடியது. மோசே கையில இருந்த கோல் பாம்பா மாறினது, அவர் கை தொழுநோயா மாறி அப்புறம் நல்லா மாறினது மத்த அடையாளங்களை எகிப்திய மந்திரவாதிகளும் காப்பி அடிச்சு செஞ்சாங்க. ஆனா ஒரு முழு நாட்டு மக்களை அடிமைத்தனத்துல இருந்து காப்பாத்தி புது நாட்டை அவங்களுக்குக் கொடுக்கறதுங்கற அற்புதமான அடையாளத்தை கர்த்தர் மட்டும் தான் செய்ய முடியும்.
கடவுள் கிட்ட நாம அடையாளம் கேட்டோம்னா ஒரு வகையில நாம விசுவாசத்த எதுக்கத் தான் செய்யறோம். கடவுள் மேல விசுவாசம் இருந்தா அடையாளங்கள கண்ணால பாக்கமுடியாட்டி கூட , நமக்குக் கடவுள் தந்த வேலைக்கு எதிரான அடையாளங்கள் கிடைச்சாக்கூட தொடரணும். கடவுள் உங்கள ஒரு வேலைக்கு அனுப்பறப்போ அடையாளம் கேளுங்க தப்பில்ல. ஆனா எந்த வேலைக்கு கடவுள் உங்கள அனுப்பறாரோ அது நிறைவேறுறது தான் உண்மையிலேயே பெரிய அடையாளம் - இத மறந்துறாதீங்க. அதனாலத் தான் கடவுள் தன்னோட வேலைக்கு நம்மளக் கூப்படறப்போ நமக்கு அதிகமான விசுவாசம் தேவைப்படுது.
மனுஷங்க அடிக்கடி மாறிப்போயிடுவாங்க. ஆனா நேத்து, இன்னிக்கி எப்பவுமே மாறாத கடவுள் தன்னோட பெயர் "இருக்கிறவராகவே இருக்கிறவர்"னு சொல்றார். நம்மள அவரோட வேலைக்குத் தேர்ந்தெடுக்கறதே ஒரு அடையாளம் அப்புறமா அது நிறைவேறினா அது பெரிய அற்புதம்.
உப்பா, ஒளியா அவரோட சாயலை மத்தவங்களுக்குக் காட்டறது அவர் நமக்கு முன்னால வச்சிருக்கற பெரிய வேலை. அவர் கூப்படறப்போ, 'இதோ அடியேன்' அப்படின்னு சொல்லுங்க, போங்க.
என்னோட Blogஐப் பாருங்க. ஃப்ரெண்ட்ஸ்க்கு அறிமுகம் செய்யுங்க.
1 comment:
Ah, very nice!
Glory to God!
Post a Comment