Thursday, August 7, 2008

இருக்கிறவராகவே இருக்கிறவர்!

நான் இருந்தேன்
நான் இருக்கிறேன்
நான் இருப்பேன்
தலைமுறை தலைமுறையாக...

என்றென்றைக்கும் நம்மோட இருக்கற கடவுளோட பிரசன்னத்துக்குப் பல அர்த்தங்கள் உண்டு:
- மூத்த இளைய தலைமுறைகள் இரண்டுமே கீழ்ப்படிய வேண்டிய
உயர்ந்த அதிகாரம்.
- எல்லா தலைமுறைகளுக்கும் பொதுவான ஒழுக்கம் சட்டம் ஆகிய
தரத்தின் காரணம்.
- எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு உதவியாக இருப்பவர்.
- சர்வ வல்லவர் - காட்டுமிராண்டி காலத்திலிருந்து நியூக்ளியர்
சண்டை வரை.
- நித்திய கடவுள் - எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில்
மாறாத ஒரே நபர்.
- வரலாற்றுக்கு கடவுள். (எகிப்து, இஸ்ரவேல், கானான், இந்தியா
எல்லா நாடுகளின் வரலாற்றிலும் அவர் ஆட்சி செய்கிறவர்)

"நான் உன்னோடே இருக்கிறேன்" அப்படிங்கற வாக்கு நாம எப்போ பாத்தாலும் எப்படி சூழ்நிலையில பாத்தாலும் ஒரே அர்த்தம் தரக்கூடியது. பாக்கற நமக்கு அர்த்தம் வேற வேற மாதிரி தெரியலாம் ஏன்னா நாம மாறக்கூடியவங்க நம்ம சூழ்நிலைகள் மாறக்கூடியது ஆனா கடவுள் மாறவே மாறாதவர். "இன்று கடன் நாளை ரொக்கம்" அப்படின்னு கடைகள்-ல எழுதியிருப்பாங்க. நரகத்துல கடிகாரத்துல "நித்தியம்"னு எழுதியிருக்கும்-னு சின்ன வயசில என்னோட அம்மா சொல்லியிருக்காங்க. கடவுளோட மேஜையில "இருக்கிறவராகவே இருப்பவர்" அப்படின்னு பெயர்ப் பலகை இருக்கும்னு நான் கற்பனை செய்து பாக்கறேன்.

No comments: