Thursday, August 7, 2008

நீ போய் இஸ்ரவேலரின் மூப்பரைக் கூட்டி...

எனக்குத் தரிசனமாகி...உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து,

 

கடவுள் ஒரு தலைவனுக்கு தரிசனமாகி, மக்களில் இருக்கும் தலைவர்களை சந்தித்து, விடுதலையை - வரலாற்றில் மாற்றத்தைச் செய்கிறார்.

 

எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்...

 

அநீதிகள் நமக்கு செய்யப்படும்போது, கடவுள் மறந்துவிட்டாரோ? அவருக்குக் கண் இல்லையோ? என்று நாம் நினைக்கிறோம். ஆனால் மக்களுக்கு செய்யப்படும் அநீதிகளை அவர் காண்கிறார். சரியான காலத்திற்காய் அவர் காத்திருக்கிறார்.  காத்திருப்பது நமக்குக் கடினமாக இருக்கிறது.

 

நான் என் கையை நீட்டி...எகிப்தின் நடுவிலே...அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்... போகவிடுவான் ...

 

கடவுள் கையை நீட்டினால் யாரும் எதிர்க்கமுடியாது. அவரது செயல்கள் நமது கற்பனைக்கும் மேலானது , நமது பாடுகள், நமக்கு செய்யப்படும் அநீதிகள் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது. அவர் அற்புதங்கள் செய்பவர். அவரது மக்களுக்கு அற்புதங்கள், அநீதி செய்பவர்களுக்கு அழிவு.

 

எகிப்தியர் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன். நீங்கள் போகும் போது வெறுமையாய்ப் போவதில்லை.

 

400 வருஷங்கள் அடிமைகளாக இருந்து அவர்கள் உழைத்த உழைப்பை கடவுள் அவர்களுக்கு ஒரே நாளில் நாட்டைவிட்டுப் போகும்போது கொடுக்கிறார்.அவர் நீதியுள்ள கடவுள். அவர்களுக்கு நியாயமாகக் கொடுக்கப்படவேண்டிய சம்பளத்தை, மறுக்கப்பட்ட சம்பளத்தை மொத்தமாக தங்கத்திலும் வெள்ளியிலும் கொடுக்கச் செய்தார்.

 

அநீதிக்கு எதிராக நமக்கு கடவுள் தரிசனமானாலோ அல்லது அப்படி தரிசனம் பெற்ற தலைவன் நம்மை சந்தித்தாலோ, நம் பங்கு எதுவோ அதை செய்வோம். அநீதியால் பாடுபடும் மக்களுக்கு கடவுளின் அன்பு, அற்புதம், நீதி இவற்றைச் சொல்லி ஒரு விடுதலைப் பயணத்தை ஒழுங்கு செய்வோம்.

 

 

"Go, assemble the elders of Israel and say to them, 'The Lord, -...-appeared to me and said:

 

When God wants to change History, He chooses and appears to a leader; through that leader He assembles other leaders (elders).

 

I have watched over you and have seen what has been done to you in Egypt.

 

When injustice prevails, we wonder whether God is aware of that, and whether He really cares. But He is watching over the oppressed and He is seeing what is being done.

 

And I have promised to bring you up out of your misery in Egypt ...

 

God's promises are trust worthy and powerful.

 

I will stretch out my hand and strike the Egyptians with all the wonders that I will perform among them. After that, he will let you go.

 

When God intervenes in history that means wonders. Wonders to His people are terror to the enemies of God.

 

"And I will make the Egyptians favorably disposed toward this people, so that when you leave you will not go empty-handed. And so you will plunder the Egyptians." Exodus 3:16-22 (NIV) 

 

Our God is a Just God. He never tolerates injustice; and He gives correct judgement on people. The slavery of Israelites came to an end. But God had a plan to pay the Israelites for all their hard work for the 400 years. He paid them in Gold and silver. The unjust wages Egytians withheld from Israelites had to be given back.

 

God communicates His messages of Hope, Liberation and Justice through the Leader, to the Elders and then to His people. Let us pass on the mission God gives to us. Or listen and co-operate with the leaders who get God's vision and try to assemble the elders.

 

No comments: