அற்புதமா? மந்திரமா?
சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனால் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. .. ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு...உங்களுக்கு தேவனாயிருப்பேன்... உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள். (யாத்திராகமம் 6:1-7)
முற்பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு சர்வசக்தியுள்ளவர் என்ற அர்த்தமுள்ள எல்-ஷடாய் என்ற பெயரில் அறிமுகமான கடவுள், இஸ்ரவேலருக்கு, யெகோவா, இருப்பவராகவே இருப்பவர் - என்ற பெயரில் தன்னை வெளிப்படுத்துகிறார். முற்பிதாக்கள் மூவரும் வரிசையாக வந்தவர்கள், ஒருவருக்கொருவர் நன்றாகத் தெரிந்தவர்கள், கடவுளின் வாக்குத்தத்தங்கள், அற்புதங்களை நேரில் பார்த்தும் கேட்டும் சிலவற்றைப் பார்க்காமலேயும் நம்பினார்கள். ஆனால் 400 வருஷங்களாக அமைதியாக இருந்த ஆண்டவர் மேல் இஸ்ரவேலருக்கு கோபம், சந்தேகம் வந்திருக்கலாம். அவர்களுக்கு வாக்குத்தத்தம் நிறைவேறுவதை விட அடிமைத்தனம் ஒழிந்தால் போதும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம். இந்தச் சூழலில் மோசேயின் அடையாளங்கள், விடுதலை பற்றிய செய்தி அவர்களுக்கு உற்சாகம் தந்தது. போகவேண்டும் என்ற எண்ணம் சோம்பலால் வந்தது எனவே வைக்கோல் கண்டுபிடித்து செங்கல்களையும் செய்து கொடுங்கள் என்று பார்வோன் துன்பப்படுத்த துவங்கிவிட்டான். வேதனை வந்ததும் கடவுள் பற்றிய எண்ணம் அவர்களுக்கு மறைந்தது.
நாமும் கூட அற்புதங்கள் அடையாளங்களை விரும்புகிறோம். ஆனால் உடனடியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நமது வசதி எதிலாவது குறைந்தால் கடவுளுக்கு எதிராக முறுமுறுக்கிறோம்.
கடவுள் ஏன் பத்து வாதைகள் வரை காத்திருக்க வைத்தார்? விடுதலை கொடுக்க முடிவு செய்தபின் ஏன் இந்தத் தாமதம். காரணங்கள் இப்படியாகக் கூட இருக்கலாம்:
1.வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்ச்சியாகப் பதிவு செய்ய
2.இது தற்செயலாக நடந்தது என்று இஸ்ரவேலர் நினைக்காமல் இருக்க, கடவுளால் மட்டுமே இது செய்யப்பட்டிருக்க முடியும் என்ற அளவுக்கு மாபெரும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக.
3.காத்திருக்காமல், எதுவும் செய்யாமல் கிடைத்த நன்மையானவைகள் எதுவும் மதிப்பாக இருக்காது என்று கற்பிக்க
4.எகிப்தியர்கள் மேல் சரியான தீர்ப்பை வழங்க
5.அற்புதம் என்பது மந்திரம் அல்ல. கடவுளை தந்தை என்று சொல்வதாலோ, கடவுள் நம்மைத் தம் பிள்ளைகள் என்று சொல்வதாலோ எல்லாவும் மந்திரத்தில் கிடைத்தது போல் கிடைத்துவிடும் என்ற எண்ணம் ஏற்பட
அற்புதங்களும் வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதல்களும் பிரச்சனை இல்லாத வாழ்வாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கடவுள் ஒரு மந்திரவாதியும் அல்ல.
Miracle or Magic?
"I am the Lord. [3] I appeared to
God was known as God Almighty - the all powerful God when He appeared to
We want miracles, signs and deliverance, but we do not want to wait or pay the price. We do not have faith that is why we want to see signs and instant miracles. When we get some inconveneinces because of those promises and signs, we murmer. We tend to complain God. God had to drag the process of getting the Israelites freed because of the following possible reasons:
1. To make it a great Historical event.
2. To make sure that, Israelites should not think that that was a co-incidence.
3. To give the right judgement on Egyptians.
4. To teach a lesson that the good things we get without any effort of waiting do not have any value.
5. To teach that miracle is not magic. We can not buy or get anything magically when we call ourselves God's children or when God calls us His children.
Miracles and Fulfillment of God's promises are not problem free life. God is not an instant miracle machine.
No comments:
Post a Comment