என்.சி.சி வீரன் போருக்குப் போகமுடியாது. ராணுவத்தில் சேர்ந்தால் போருக்குப் போகாமல் இருக்க முடியாது.
ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி, பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்... யாத்திராகமம் 13:17
சிறு பிள்ளைகள் தடுமாறி நடப்பது போல இஸ்ரவேலர்கள் தடுமாறினாலும் ஒரு தகப்பனைப் போல அக்கறையுடன் நடத்தினார் கடவுள். அவர்கள் யுத்தத்தைக் கண்டால் மனம் மடிந்து நொந்து போய்விடுவார்கள் என்று சொல்லி, அவர்களை பெலிஸ்தரின் நாட்டைச் சுற்றி அழைத்துச் செல்கிறார். ஆனால் பின்னர் அவர்கள் கானான் நாட்டில் 'செட்டில்' ஆன பின் அதே பெலிஸ்தியருடன் யுத்தம் பண்ணினார்கள்.
நமது ஆன்மீகப் பயணத்திலும் ஆரம்பத்தில் நாம் கற்பனை செய்தே பார்த்திராத பெலிஸ்தியர்களுடன் இப்போது யுத்தம் செய்துகொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் கடவுளும் அப்படிப்பட்ட பெலிஸ்தியர்களிடம் நம்மை அணுகவிடவில்லை. ஆனால் ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சி அடையும் போது நாம் அவர்களுடன் யுத்தம் செய்வது அவரது திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது. என்.சி.சி வீரன் போருக்குப் போவதைப்பற்றி அதிகம் நினைத்திருக்க மாட்டான். அவன் படையில் சேர்ந்த பிறகு அதைப்பற்றித் தான் அதிகம் நினைக்க வேண்டும்.
An N.C.C cadet doesn't face a war. But a soldier turned N.C.C Cadet does.
When Pharaoh let the people go, God did not lead them on the road through the Philistine country, though that was shorter. For God said, "If they face war, they might change their minds and return to
The same Israelites had to fight the Philistines afterwards through out their history. But at the beginning of their liberation Journey they were treated like small children who learn to walk. When they became a nation, God made them to fight the philistines.
Don't we feel the same way in our spiritual lives too? We face and fight the 'Philistines' when we become mature in our walk of Faith. We wouldn't have thought about those things at the beginning of our spiritual journey as our future wars; God didn't allow us to face those wars either. Now that we are mature, we had to face those wars.