Is God blind, deaf, indifferent or impotant?
The Lord said, "I have indeed seen the misery of my people in
We have a personal God who can see, hear, care and help. The children of promise were suffering as God foretold
We claim some promises (all the promises are for us the believers to claim) but we are not patient. One of my favorite Cartoons goes like this:
A Christian says "We get too impatient with God"
"We ask for something and want it by Monday morning"
"I'm not going to push God"
"Tuesday morning will be o.k"
- Tuesday morning will be ok and other cartoons -
Remember:
Seen - He is seeing your problems
Heard - He has heard your prayers
Concerned - You are the apple of His eyes. He cares for you
come down - He will come down to rescue you
bring them - He will give you a better situation
So, be patient.
While waiting, why don't you be a
You can help in counseling, advocacy, making awareness, teach others about the problems, praying alone or with friends. If God leads you, go out and start a revolution or procession.
I am writing and speaking for God in this regard. Please put on the sandals you have removed at the burning bush, take the staff and walk.
கடவுள் கண் காது இல்லாதவரா? அலட்சியம் செய்கிறாரா? அல்லது கையாலாகாதவரா?
என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ...அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க(வும்)... நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டு போய்ச் சேர்க்கவும் இறங்கினேன். - யாத்திராகமம் 3:7-8
பார்க்கிற, கேட்கிற, அக்கறையுள்ள, உதவி செய்கிற ஒரு ஆள்தன்மையுள்ள தனிப்பட்ட கடவுளே நமக்கு இருக்கிறார். வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் ஆபிரகாமுக்கு கடவுள் வெளிப்படுத்தியது போல எகிப்தில் கஷ்ட்டப்பட்டார்கள். இந்த அடிமைத்தனத்துக்கு கடவுள் கண்டுகொள்ளாமல், கேட்காமல், அக்கறை இல்லாமல் இருந்தார் அவரால் முடியவில்லை என்று அர்த்தமல்ல. சரியான நேரத்துக்காகக் காத்திருந்தார். நேரம் சரித்திரம் இவை கடவுளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.
கடவுள் தன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற 400 வருஷங்களும் மக்களை வனாந்தரத்தில் வடிகட்ட 40 வருஷங்களும் எடுத்துக் கொண்டார். நாமும் பல வாக்குத்ததங்களை வைத்து ஜெபிக்கிறோம். (விசுவாசிக்கிற நமக்கு வேதத்தில் இருக்கும் எல்லா வாக்குத்தத்தங்களும் பொருந்தும்). ஒரு நகைச்சுவைக் கருத்துப்படத்தில் ஒரு கிறிஸ்தவர் இப்படிச் சொல்வார்:
"கடவுள் கிட்ட நாம பொறுமையாவே நடந்துக்கறது இல்ல" "நாம எதையாச்சும் ஞாயித்துக் கிழமை கடவுள் கிட்ட கேட்டுட்டு, திங்கக்கிழமை அது வேணும்னு கேகக்றோம்" "நான் அப்படி கடவுள அவசரப்படுத்த மாட்டேன்" "செவ்வாய்க்கிழமை காலைலன்னா பரவால்ல"
- Tuesday morning will be ok and other cartoons -
மறந்துடாதீங்க:
* பார்க்கவே பார்த்து...அவர் உங்க பிரச்சனைகளப் பார்க்கறார்.
* கூக்குரலைக்கேட்டேன்... அவர் உங்க ஜெபங்களக் கேக்கத்தான் செய்யறார்.
* வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்... அவர் உங்களை விசாரிக்கிறவர், அக்கறையுள்ளவர். நாம் அவர் கண்ணின் மணிகள் இல்லியா?
* விடுதலையாக்க(வும்)... இறங்கினேன் ... அவரால விடுவிக்க முடியும் விடுவிப்பார்.
*கொண்டு போய்ச் சேர்க்கவும் இறங்கினேன் ... அவரால நல்ல புதிய சூழ்நிலைய உருவாக்க முடியும், நம்பலாம்.
ஆனா பொறுமையா காத்து இருக்கணும்!
காத்திருக்கறப்போ... மோசே செஞ்சது போல உபத்திரவப்படுகிற மக்கள விடுதலை செய்யறதுக்குக் கடவுளோட சேந்து வேலை செய்யலாமே - மோசே மாதிரி?
ஆலோசனை, குரல் குடுக்கறது, விழிப்புணர்ச்சிய உருவாக்கறது, மத்தவங்களுக்கும் இதப்பத்தி கத்துக் கொடுக்கறது, தனியாவோ கூட்டமாவோ ஜெபிக்கறது இப்படி ஏதாவது செய்யலாமே. நான் எழுதறேன் பேசறேன். எரிகிற முட்செடிக்குப் பக்கம் கழட்டிப் போட்ட செருப்ப மாட்டிக்குங்க. கையில தடிய எடுத்துட்டு நடையக் கட்டுங்க. கடவுள் அழைச்சார்னா புரட்சி பண்ணுங்க �
No comments:
Post a Comment