Tuesday, August 12, 2008

Ear Phones

காதுள்ளவன்

 

கர்த்தர் மோசேயை நோக்கி, "பார் உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்." (யாத்திராகமம் 7:1)

 

பொதுவாக, மக்களால் கடவுள் பேசுவதைக் கேட்கமுடியாது எனவே தான் கடவுள் தீர்க்கதரிசிகள் என்ற சிறப்பான தலைவர்கள் மூலம் ஆதிகாலத்தில் பேசியிருக்கிறார்.

 

மோசேயை கடவுள் போலவும் ஆரோனை தீர்க்கதரிசியைப் போலவும் என்று கடவுள் உவமையாகச் சொல்லியிருக்கிறார். மக்கள், தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் பேசும் வார்த்தைகளைக் கேட்காமல் போக என்ன காரணங்கள் இருக்கின்றன?:

 

1. அவர்கள் கடவுளை அறியாமல் இருப்பது. [நான் கர்த்தரை அறியேன். நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை. (5:2)]

 

2.கடவுள் சொல்வது உண்மைதானா என்று சோதித்து அறிய விரும்புதல். அதே சக்தி மனித ஞானத்துக்கு இருக்கிறதா என்று அறிய விரும்புதல். [பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள். (7:11)]

 

3.கடவுளை அறிந்த மக்களும் தங்கள் மனச்சோர்பு, அதிகமான வேலைப்பளு ஆகியவற்றால் செவிகளை மூடிக்கொள்ளுதல். [அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள். (6:9)]

 

நம் கைகளில் வேதபுத்தகம் இருக்கிறது. கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு நடக்க எந்தத் தடைகளும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். உலக ஞானமோ, உலக வேலைகளோ நடுவில் வராமல் பார்த்துக் கொள்வோம்.

 

Ear Phones

 

 

Then the Lord said to Moses, "See, I have made you like God to Pharaoh, and your brother Aaron will be your prophet. - Exodus 7:1 (NIV) 

 

People can not 'hear' God normally. So God chooses a special person called prophet. Here God likens Moses to Himself and Aaron to a prophet. There are different things that prevent people from listening to the words of the prophets:

 

1. They do not know God who speaks through the prophet. (Pharaoh said, "Who is the Lord, that I should obey him and let Israel go? I do not know the Lord and I will not let Israel go." 5:2)

 

2. Though they know God, thier discouragement and oppression prevent them from listening. [Moses reported this to the Israelites, but they did not listen to him because of their discouragement and cruel bondage (6:9)]

 

3. They want to try other means to check whether the words of the prophets are really true. [Pharaoh then summoned wise men and sorcerers, and the Egyptian magicians also did the same things by their secret arts (7:11)]

 

Let us listen to the word of God in the midst of the discouragements and oppressions. Let us not try our own wisdom to replace the word of God.

1 comment:

Nitecrawl3r said...

i wonder how you get to think like this!! i read those verses a few weeks back.. i guess i had a lot of things blocking my mind from meditating!! thx anna!! :)