29 September 2008
Exodus 31:16 (NIV)
The Israelites are to observe the Sabbath, celebrating it for the generations to come as a lasting covenant.
Are we celebrating every Sunday? Not only in the sense of party, sleep, special meal, outing and shopping... the gathering of God’s people in the church, the communion that is the sign of God’s love, the word of God, the remembrance of the resurrection of Jesus (previously Saturday was the Sabbath. But the disciples of Christ in the early church made the first day of the week- the day on which Jesus rose again from the dead, as the Sabbath) We have many more reasons to celebrate every Sunday. But we are overwhelmed by all the other stuff of the previous week or the coming week.
ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும் என்று கடவுள் நமக்கும் சேர்த்துக் கட்டளை கொடுத்திருக்கிறார்.
சிறப்பு சாப்பாடு, நல்ல தூக்கம், பார்ட்டி, ஊர்சுற்றுதல், ஷாப்பிங் மட்டும் கொண்டாட்டம் என்று நிறுத்திவிடாதீர்கள். ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன:
கடவுளின் மக்கள் கூடிவருவது, நற்கருணை என்னும் கடவுளின் அன்பின் அடையாளம், ஆண்டவருடைய வார்த்தையாகிய வேதவசனம், இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூருதல் (சனிக்கிழமையாக இருந்த ஓய்வு நாளை, இயேசு உயிர்த்தெழுந்த நாளாகிய வாரத்தின் முதல் நாளுக்கு மாற்றி கொண்டாடினார்கள் ஆதி கிறிஸ்தவர்கள்) இப்படியே பட்டியலை நீட்டலாம். ஆனால் முந்திய வாரம் அல்லது அடுத்த வாரம் பற்றிய நினைவுகளில் முங்கிப்போய் இருந்தால் எங்கேயிருந்து கொண்டாட ஆசை வரும்?
28 September 2008
Exodus 31:2-3 (NIV)
"See, I have chosen Bezalel son of Uri, the son of Hur, of the tribe of Judah, [3] and I have filled him with the Spirit of God, with skill, ability and knowledge in all kinds of crafts--
Skill – Unique gift – Quality of work
Ability – stamina – precision – strength to do quantities
Knowledge – variety – ideas – consistency – capacity to learn and acquire more information
ஞானம் - தனிப்பட்ட நபருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பான ஈவு - சிறப்பான வேலை
புத்தி - நுட்பமாக கூர்மையாக வேலை செய்தல் - நீண்டகாலம் செய்யும் உறுதி - அதிகம் செய்வதற்கான உரம்
அறிவு - விதவிதமாக செய்ய சிந்தனைகள் - புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் அதிக விஷயங்களைச் சேகரிக்கவும் ஆற்றல் - தொடர்ச்சியாக சிறப்பாக வேலைசெய்யும் திறன்.
27 September 2008
Exodus 30:12 (NIV)
"When you take a census of the Israelites to count them, each one must pay the Lord a ransom for his life at the time he is counted. Then no plague will come on them when you number them.
Ransom is the money paid for saving your life. Taking census, is that that serious? Or sinful?
Census may bring pride in us as we put our trust on the strength of numbers. God is our strength and paying ransom gives us the warning that trusting the numbers and human strength will destroy us.
கணக்கெடுக்கும் போது மக்கள் மீட்கும் பொருளாக ஒரு காணிக்கையைக் கொடுக்க வேண்டும். கணக்கெடுப்பது அத்தனை பாவமான காரியமா? நாம் மக்களின் எண்ணிக்கையில் நம்பிக்கை வைப்பது கடவுள் மேலுள்ள நம்பிக்கையைக் குறைக்கலாம். கடவுள் தான் நமது பலம், நம்பிக்கை. ஆகவே மீட்கும் பொருளான காணிக்கையைக் கொடுப்பது நமது பெருமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் கடவுளை மட்டுமே நம்பவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
26 September 2008
Exodus 29:44-45 (NIV)
"So I will consecrate the Tent of Meeting and the altar and will consecrate Aaron and his sons to serve me as priests. Then I will dwell among the Israelites and be their God.
The place, that is the tent - and the priests are made special by the presence of God. The dwelling of God makes the tent the temple of God and the ordinary persons the priest.
God’s presence makes all the difference in the ordinary things and people.
கடவுளின் பிரசன்னம் தான் ஒரு கூடாரத்தைக் கடவுளின் ஆலயமாகவும் சில மக்களை அவரது ஆசாரியர்களாகவும் மாற்றுகிறது. கடவுளின் பிரசன்னம் சாதாரண நபர்களையும் இடங்களையும் சிறப்பாக்குகிறது.
25 September 2008
Exodus 28:29 (NIV)
"Whenever Aaron enters the Holy Place, he will bear the names of the sons of Israel over his heart on the breastpiece of decision as a continuing memorial before the Lord.
Exodus 28:36 (NIV)
"Make a plate of pure gold and engrave on it as on a seal: holy to the LORD.
Even the robe the priest is wearing has significance. The priest is the one who takes the affairs of the people to God. His heart must be closer to the people for whom he atones and sacrifices. His mind should be closer to God, he is holy to the Lord.
ஆசாரியன் அல்லது இந்தக் காலத்து ஆயர் அல்லது குருவானவர் மக்களின் பிரச்சனைகளைக் கடவுளிடம் கொண்டு செல்பவர். அவரது இருதயம் மக்களை நெருங்கியிருக்க வேண்டும். அவரது தலை அல்லது சிந்தனைகள் கடவுளை நெருங்கியிருக்க வேண்டும். ‘கர்த்தருக்குப் பரிசுத்தம்’ என்பது தானே அவர் தலைப்பாகையில் சின்னம் போலப் பொறிக்கப்பட்டிருக்கிறது?
24 September 2008
Exodus 27:21 (NIV)
In the Tent of Meeting, outside the curtain that is in front of the Testimony, Aaron and his sons are to keep the lamps burning before the Lord from evening till morning. This is to be a lasting ordinance among the Israelites for the generations to come.
When God wanted the future generations to follow something He used the present generation to create the model carefully. He instructs the details to the leader, the craftsmen and to the congregation the lasting ordinance.
கடவுள் காலங்காலமாக மக்கள் பின்பற்ற வேண்டிய நியமங்களை ஏற்படுத்தும் போது தான் தேர்ந்தெடுத்த தலைவர், சிறந்த கலைஞர்கள் மூலம் துல்லியமான மாதிரிகளைக் கொடுத்து செய்ய வைக்கிறார். ஏனென்றால் வருங்கால சந்ததியினர் அவற்றைப் புரிந்து கைக்கொள்வதற்கு இது தெளிவாக இருக்க வேண்டும்.
23 September 2008
Exodus 26:31 (NIV)
"Make a curtain of blue, purple and scarlet yarn and finely twisted linen, with cherubim worked into it by a skilled craftsman.
In Genesis God just spoke the words in general let there be.............. and the thing was created.
He created man in a special way. Here in Exodus, God gives the details to the craftsmen.
ஆதியாகமத்தில் பொதுவாக வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் வெளிச்சம் உண்டானது இதைப் போலவே அனைத்தும் உருவாகின. மனிதனை சிறப்பாக உருவாக்கினார். யாத்திராகமத்தில் ஒவ்வொரு நுணுக்கமான விபரத்தையும் கொடுத்து கடவுள் தனது கூடாரத்தை உருவாக்குகிறார்.
22 September 2008
Exodus 25:9 (NIV)
Make this tabernacle and all its furnishings exactly like the pattern I will show you.
The Lord who created the whole universe by His word now gives Moses and the craftsmen guidance as to how to create the tabernacle, the dwelling place of God in the midst of Israelites.
Here also the word is being used but not directly, but through His servants.
ஆதியிலே வார்த்தையால் வானம் பூமி அனைத்தையும் படைத்த ஆண்டவர் இங்கே தனது வார்த்தையால் மோசே மற்றும் கலைஞர்கள் மூலம் இஸ்ரவேலர் நடுவே அவர் வாசம் செய்யும் கூடாரத்தை உருவாக்குகிறார்.
21 September 2008
Exodus 25:2 (NIV)
"Tell the Israelites to bring me an offering. You are to receive the offering for me from each man whose heart prompts him to give.
How great and glorious it would be if every Christian leader follows this advice of God and every Christian gives the offering according to this guide line.
God prompts the heart to give. And He wanted Moses to receive from those whose heart prompted to give. But today’s Moseses prompt people to give.
How can we let God prompt us to give? How can we stop other forces from prompting us from giving? How can we discern between the prompting of the Lord through a minister of God and the pure psychological prompting of the ministers of God?
கடவுளின் இந்த ஆலோசனையை எல்லா ஊழியர்களும், தலைவர்களும் பின்பற்றினால் எத்தனை நன்றாக இருக்கும்? உற்சாகமாய்க் கொடுப்பவர்களிடம் மட்டும் காணிக்கை வாங்குவதாக இன்றைய மோசேக்கள் சொன்னால் எப்படி மகிமையாக இருக்கும்? கொடுப்பவர்களும் உற்சாகம் இல்லாமல் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால் எத்தனை உண்மையும் சுத்தமும் இருக்கும்?
கடவுள் உற்சாகப்படுத்துவதற்கும் ஊழியர்கள் உற்சாகப்படுத்துவதற்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? ஊழியர் மூலம் கடவுள் உற்சாகப்படுத்துகிறாரா அல்லது கடவுள் பெயரைச் சொல்லி மனோதத்துவ முறைப்படி ஊழியர் தான் உற்சாகப்படுத்துகிறாரா?
20 September 2008
Exodus 24:1-2 (NIV)
"Come up to the Lord, you and Aaron, Nadab and Abihu, and seventy of the elders of Israel. You are to worship at a distance, but Moses alone is to approach the Lord; the others must not come near. And the people may not come up with him."
When God gives a vision and a mission to a leader, only the leader has to pass that on to the people through some second line leaders. Nobody understands the vision and mission of God like the one to whom God is giving them. The leader approaches God and shares what God has put in his mind and heart to the like minded people. The second line leaders in turn spread the message to the people. This hierarchy is not like the worldly leadership style. If we look into the life of Moses, we will know the reason why God chose him to be the leader. The humility, selflessness, faithfulness and zeal set him apart.
கடவுள் ஒரு தலைவனுக்கு தரிசனத்தையும் பணியையும் கொடுக்கும்போது அவன் மட்டுமே கடவுளை சந்திக்கிறான். அடுத்த படியில் இருக்கும் தலைவர்களுக்கு கடவுள் கொடுத்த செய்தியை தலைவன் கொடுக்க அவர்கள் மற்ற மக்களிடம் அவற்றைக் கொண்டு செல்கிறார்கள். ஏனென்றால் யாருக்குக் கடவுள் தரிசனத்தையும், சிறப்பான ஒரு பணையையும் கொடுக்கிறாரோ அந்தத் தலைவனைப் போல வேறு யாருக்கும் அது புரியாது வேறு யாரும் அந்தப் பணியைச் செய்யவும் முடியாது. கடவுள், தலைவன், அடுத்த உப தலைவர்கள், மக்கள் என்று இருக்கும் இந்த அதிகாரப் படிகள் மற்ற உலகப்பிரகாரமான தலைமைத்துவத்தைப் போல அல்ல. மோசேயின் வாழ்க்கையைக் கூர்ந்து படித்தால், கடவுள் ஏன் மோசேயை தலைவனாகத் தேர்ந்தெடுத்தார் என்பது புரியும். தன்னலமில்லாத, உண்மையுள்ள, வைராக்கியமுள்ள மோசேயால் மட்டுமே தலைவனாக இருக்கமுடியும் என்பதால் தான் அவனைத் தலைவனாக்கினார் கடவுள்.
19 September
Exodus 23:29-30 (NIV)
But I will not drive them out in a single year, because the land would become desolate and the wild animals too numerous for you. Little by little I will drive them out before you, until you have increased enough to take possession of the land.
When God gave the Israelites the Land, He prepared the Land as well as the people. The Land was not given at once. The original people were sent out little by little so that the land would not become desolate. The Israelites were given time to increase. The promise to Israelites was fulfilled at the same time the judgment on the original people of the land was also pronounced.
இஇஸ்ரவேல் மக்களுக்கு கானான் நாட்டைக் கொடுத்த போது கடவுள் அவர்களுக்கு ஒரே நாளில் கொடுக்கவில்லை. நாடு தயாராக்கப்பட்டது மக்களும் தயாராக்கப்பட்டார்கள். இஸ்ரவேலருக்கு வாக்குத்தத்தம் நிறைவேற்றப்பட்டது. கானான் நாட்டில் ஏற்கனவே குடியிருந்த மக்கள் மேல் கடவுளின் நியாயத்தீர்ப்பும் தண்டனையும் வந்தது.
18 September 2008
Ex 23:14-19
Celebration should come spontaneously. But here God commands the Israelites to celebrate three times a year. Some times we loose interset in celebrations and celebrate the unwanted things and neglect the important things. So let us celebrate even though it is a duty.
கொண்டாட்டம் தானாகவே வரக்கூடியது. ஆனால் கடவுள் இங்கே கொண்டாட வேண்டும் என்று கட்டளை கொடுக்கிறார். நாம் கொண்டாட வேண்டிவற்றை விட்டுவிட்டு, தேவையில்லாதவற்றைக் கொண்டாடக் கூடாது என்பதற்காக இப்படி சொல்லியிருக்கலாம். எப்படியோ கண்டிப்பாகக் கொண்டாடுவோம்.
17 September 2008
Ex 23: 10- 13
ஆறு நாளும் வேலை செய் ஏழாவது நாள் ஓய்வு எடு என்று கடவுள் சொல்கிறார். நிலத்துக்கும் ஆறு வருடங்களுக்கு ஒரு வருடம் ஓய்வு. வேலைக்காரர்கள், கழுதைகள் கூட ஓய்வு எடுக்க வேண்டும் என்கிறார் கடவுள். இந்தக்காலத்து இயந்திரங்களுக்குக் கூட ஓய்வு கொடுக்கச் சொல்வாரோ என்னவோ? இளைப்பாற ஓய்ந்திருப்பாயாக என்கிற வார்த்தைக்கு Refresh என்ற ஆங்கில வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நாள் ஓய்வு மற்ற ஆறு நாட்களும் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் வேலை செய்ய உதவி செய்வதால் ஏழு நாட்களும் இயந்திரத்தனமாக வேலை செய்வதை விட ஆறு நாட்கள் மனிதனாக வேலை செய்வது நல்லது தானே. வேலையின் அளவு கூடாவிட்டாலும் தரம் கூடும் அல்லவா?
God commands the leader of the house to take rest so that the servants and animals in the house also will take rest and get refreshed. The rest is for refreshment. Refreshment helps improve the quality of the work. Instead of working like a machine 24X7 you work six days with renewed enthusiasm.
16 September 2008
யாத்திராகமம் 23:1-9
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று சொன்ன அதே கடவுள் இங்கே எதிரியின் கழுதையோ, மாடோ, தொலைந்து போயிருந்தாலோ விழுந்து கிடந்தாலோ காப்பாற்று என்றும் சொல்கிறார். நீதிமன்றத்தில் ஏழைகள் மற்றும் பலகீனமானவர்களை ஒடுக்கக்கூடாது என்றும் லஞ்சம் வாங்கக் கூடாது என்றும் சொல்கிறார் கடவுள். பழைய ஏற்பாட்டுக் கடவுள் கொடூரமானவர், போர்கள், கொலைகளை அனுமதித்தார் என்றெல்லாம் சிலர் நினைப்பதுண்டு. ஆனால் இந்தப் பகுதியில் இரக்கத்தையும் நீதியையும் அவரது மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் கடவுள்.
The Lord of the Old Testament is being viewed as a God of violence. But here we see the other side of the Lord. Who is Graceful and Merciful.
15 செப்டம்பர் 2008.
யாத்திராகமம் 22:16-31
இஸ்ரவேல் மக்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட, அவர்கள் பின்பற்றிய கட்டளைகள் மிகவும் விளக்கமாக சிறு விபரங்கள் கூட தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. நம் காலத்திலோ, கிறிஸ்தவர்களுக்குள்ளே கூட இவற்றில் ஒருமனம் இல்லை. எனவே தான் நாம் நமது சொந்த அறிவு, பின்னணி இவற்றை வைத்துக் கொண்டு நமக்கு நாமே சில கட்டளைகளை வைத்துக் கொள்கிறோம். என் கட்டளைகள் எனக்கு, உன் கட்டளைகள் உனக்கு. ஒருவர் வழியில் இன்னொருவர் குறுக்கிட வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பத்துக் கட்டளைகளின் விளக்கவுரை போல அடுத்து வரும் அதிகாரங்கள் இருக்கின்றன. பத்துக் கட்டளைகளில் இல்லாத பல சிறு கட்டளைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, கடவுள் ஒருவரே வேறு உருவங்களை உருவாக்க வேண்டாம் என்ற முதல் இரு கட்டளைகளின் விளக்கமாகவும் விரிவாக்கமாகவும் இந்த வசனங்களைப் பார்க்கலாம்:
18. சூனியக்காரி(காரன்?)யை உயிரோடே வைக்க வேண்டாம்.
20. கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
கடவுள் போதும், அவர் சொல்வதைக் கேட்போம் என்றிருந்த மக்களுக்கு இப்படி விபரமான கட்டளைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்தக் காலத்திலோ அறிவு பெருத்துப் போனது மட்டுமல்ல. இஸ்ரவேலர் தவிர மற்ற இனத்தவருக்கும் பொதுவாக கடவுள் கட்டளைகளைக் கொடுத்த போது, பலவித கலாச்சாரங்கள் பின்னணிகளிலிருந்து வரும் மக்களும் எளிதாகப் புரிந்து பின்பற்றும் கட்டளைகள் தேவை. அது பெரிய பட்டியலாக இருக்கக் கூடாது. மக்களைக் குழப்புவதாகவும் இருக்கக் கூடாது. அதனால் தான் இயேசு இவற்றையெல்லாம் சுருக்கி, இரண்டே கட்டளைகளாக்கினார் (கடவுளை நேசி, மனிதர்களை நேசி). அவரது போதனைகள், கதைகள், கட்டளைகள் அனைத்துமே இந்த இரண்டு கட்டளைகளை வலியுறுத்துவதாகவே இருந்தன.
14 september 2008
True Trustee.
Exodus 22:1-15
I think this portion is an extension and explanation of the 8th commandment and the 10th commandment. A person who doesn’t covet and steal can be trusted.
உண்மையான உக்கிராணக்காரன்.
யாத்திராகமம் 22:1-15
இந்தப் பகுதி எட்டாவது மற்றும் பத்தாவது கட்டளைகளின் விளக்கமாகவும் விரிவாக்கமாகவும் இருப்பதாக நினைக்கிறேன். பிறர் பொருளை களவு செய்யாத, இச்சிக்காத ஒரு மனிதனை நாம் நம்பலாம்.
13 September 2008
கொலை ஒன்று சங்கு இரண்டு
Exodus 21:12-36
யாத்திராகமம் 21:12-36
கொலை செய்யாதிருப்பாயாக என்று ஆறாம் கட்டளை சொல்கிறது. கொலை செய்தால்? என்ற கேள்விக்கு இந்தப் பகுதி பதில் சொல்கிறது. தெரிந்து திட்டமிட்டுக் கொலை செய்பவனுக்கு சங்கு தான். தவறி கொலை செய்தவனுக்கு சிறிது மன்னிப்பும் வாழ்க்கையும் கிடைக்கிறது. தாக்குதலில் உயிர் போனால் கொலை, உயிர் போகவில்லையென்றால்? மனிதனைக் கொல்லும் மிருகங்களுக்குத் தண்டனை உண்டா? இப்படிப் பலவகை கேள்விகளுக்குப் பதில் இருக்கிறது இங்கே. ஆனால் பழிக்குப் பழி என்ற கருத்து இங்கே அதிகம் தெரிகிறது. இது கடவுள் நீதியை நிலைநாட்டுவதற்காகச் சொன்ன கருத்தே ஒழிய ஒருவரை ஒருவர் அழிப்பதற்காக சொல்லப்பட்டதல்ல. அநீதி செய்பவர்களைப் பயப்படுத்தவே இந்தக் கொடூர சட்டம் கொடுக்கப்பட்டது. மக்களை அழிப்பதற்காக அல்ல. பழிவாங்குபவர் கடவுளே என்பது தான் இதில் நமக்குத் தரப்படும் ஒரு பாடம்.
12 September 2008
வேலைக்காரனா? அடிமையா?
யாத்திராகமம் 21:2-11
கடவுள் அடிமைத்தனத்தை ஆதரித்தாரா? என்ற கேள்வியை எழுப்பும் பகுதி இது. வேலைக்காரர்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டார்களா? அல்லது அடிமைகள் வேலைக்காரர்களாக நடத்தப்பட்டார்களா? என்பது தான் குழப்பம். வார்த்தைகள் சிறிது குழப்பத்தைத் தருகின்றன. ஆனால் இங்கே கடவுளின் நீதி வெளிப்படுகிறது. ஒருவன் வேலைக்காரனாக இருந்தாலும் அவன் ஆறு வருடங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கட்டளையானது யாருமே நிரந்தரமாக அடக்கி வைக்கப்படக் கூடாது, எல்லாருக்குமே முன்னேறும் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கடவுளின் திட்டம் தெரிகிறது.
11 September 2008
உருவமில்லாத இறைவன்
யாத்திராகமம் 20:22-26
வானத்திலிருந்து கடவுள் பேசுவதைக் கேட்ட இஸ்ரவேலர் பூமியிலுள்ள எந்த உருவத்தையும் விக்கிரகமாக உருவாக்கக் கூடாது என்று கட்டளை தருகிறார். உருவமில்லாத கடவுள், வானத்திலிருந்து தன் குரலைக் கேட்கப்பண்ணின கடவுள் தனது மக்கள் அந்த உண்மையை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கிறார்.
10 September 2008
“You shall not give false testimony against your neighbor. Ex 20:16
What about
9 September 2008
Ex 20:17 “You shall not covet your neighbor’s house. You shall not covet your neighbor’s wife, or his manservant or maidservant, his ox or donkey, or anything that belongs to your neighbor.”
8 September 2008
Ex 20:15 “You shall not steal.”
We steal many intangible things and break this commandment consciously or unconsciously. For instance,
1. The credits due to others
2. The time due to our family, God and Job
3. The Love due to our neighbors
4. The money due to the creative people (Piracy is stealing)
திருடி திருடா(தே)
கண்ணால் பார்க்க முடியாத பலவற்றை நாம் திருடுகிறோம். தெரிந்தோ தெரியாமலோ எட்டாவது கட்டளையை மீறுகிறோம். உதாரணமாக:
1. பிறருக்குப் போக வேண்டிய புகழ் பெயர் இவற்றை நாம் திருடலாம்
2. நம் குடும்பத்திற்கு, வேலைக்கு, கடவுளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நேரத்தைத் திருடி வேறு எதற்காவது கொடுத்தல்
3. பிறருக்கு நாம் காட்ட வேண்டிய அன்பைத் திருடுகிறோம்
4. கலைஞர்களுக்குப் போக வேண்டிய பணத்தைத் திருடுகிறோம். (திருட்டு சிடி, காப்பி செய்த எம்.பி த்ரீ, ரோட்டுக்கடை பைரேட்டட் புத்தகங்கள், ஃபோட்டோ காப்பி போன்ற எல்லா வகை பைரசிகளும் திருட்டு தான்.)
Monday, September 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hmmmm... tat's a lot of work i guess!! thx anna.. well when you were here it was different.. wid a lot of sharing it's different now!! really different.. Learning to live alone n still live wid ppl around n share!! awesome!!
Post a Comment